Book Review – கங்கை எங்கே போகிறாள்?

🧍🏻‍♀️ புத்தகம்: கங்கை எங்கே போகிறாள்?
🧍🏻‍♀️ எழுத்தாளர்: ஜெயகாந்தன்
🧍🏻‍♀️ வெளியீடு: 1978, மீனாட்சி புத்தக நிலையம்
🧍🏻‍♀️இலக்கியநடை: நாவல்
🧍🏻‍♀️ பக்கம்: 252
🧍🏻‍♀️ விலை: 200


Blogpost by Dhanu

4.5/5

இதன் முதல் பாகமான ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ வாசித்து முடித்த பின், என்ன இது! இவ்வளவு தான் கங்கா-வின் வாழ்க்கையா? தன் வாழ்வில் என்ன நிம்மதியை கண்டால்?

ஒருவர் தன்னுடைய வாழ்க்கையை எவ்வளவுதான் தடம் புரட்டிக் கொள்வது?

நாவலின் ஆரம்பத்தில் தனது அசட்டுத்தனத்தால் பலரது வாய் பேச்சுக்கு ஆளானதாக எண்ணிய அதே கங்கா, இப்பொழுது விரக்தி அழித்துக்கொள்ள முடிவு எடுத்துவிட்டாளே!

இவ்வாறாக விடை எதிர்நோக்கிய என்னை போன்ற வாசகர்களுக்குகாகவே பதிலளிக்க எழுதப்பட்ட நாவலே ‘கங்கை எங்கே போகிறாள்?’. இந்நாவலில், கங்கா தன்னை மீண்டும் எவ்வாறு மீட்டு எடுத்து தனது மதிப்பை தனது குடும்பம் மற்றும் அடுத்தவர்களின் முன்னிலையில் தலைநிமிர செய்கிறாள் என்பதே கதை.

முதல் பாகத்தில் பிரபு-வின் அறிமுகத்தினால் இருமுறை தனது வாழ்க்கை திசைமாற செய்தது போல அல்லாமல் தனக்கென ஒரு சீரான அஸ்திவாரம் அமைத்து இறுதியில் எவ்வாறு ஒரு சமநிலை அடைகிறாள் என்பதே கதையின் அமைப்பு. இந்நாவலின் கதைக்களம் சற்று வேகமாகவே நகர்கிறது. இருபதுகளில் தன்னை நிலைக்கொள்ள ஆரம்பித்த கங்காவின் விஜயம் இறுதியில் தன் மனதிற்கு அமைதியான சூழலில் நிறைவடைய செய்துள்ளார் ஆசிரியர், ஜெயகாந்தன்.

தனது பயணத்தில் எவர்எவரை தன்னுடைய நிலைப்பாட்டில் வைத்துகொள்ள வேண்டும் எவரை விலக வேண்டும் என்பதில் தெளிவாக அமைகிறது கங்காவின் இந்த பயணம். இதில், பிரபு, மாமா வெங்கு, அம்மா கனகம், கணேசன் மற்றும் அவனது குடும்பம் என்று தன்னுடன் எவ்வாறு பயணம் செய்ய போகிறார்கள் என்பதையும் தெளிவாக வகுத்துக்கொண்டு செயல்படும் விதம் கங்காவின் கதாபாத்திர முன்னேற்றநிலையை உணர செய்கிறது.
எனினும், முதல் பாகத்தில் தனக்கென ஓர் கர்ஜனையோடு இருந்த கங்கா, அதிகமாக வாய்திறந்து பேசாவிட்டாலும் தனது செயல்கள் மூலமாக மற்றவர்களை அதிர வைத்த கங்கா-வின் தோரனை இப்பாகத்தில் மாற்றம் பெற்றுள்ளதை காணலாம். முதலில், தனக்கு தானே கவசம் என நின்றவள், பின்னாளில் தனது குடும்பம், அவர்களது தேவைகள் என கதை நகர்வது முதன்மை கதாபாத்திரத்தின் பாத்திர முதிர்ச்சியை சிறிது அவசரநிலைப்பாட்டில் அமைந்த உணர்வை எனக்கு ஏற்படுத்தியது. இது மற்ற கதாபாத்திரங்களுக்கும் பொருந்தும்.

கதைகளம் எளியநடையில் அமைந்திருந்தாலும் கூட காலசக்கரத்தின் சுழல் சற்று வேகமாக கதையை நகர்த்தி செல்கிறது. இதனால், அவ்வப்போது கதையின் காலநிலையை அறிய சிறிது சிரமம் ஏற்ப்பட்டது. இந்த பாகத்தின் கதாபாத்திரங்கள் மற்றும் அவற்றின் முக்கிய பங்குகள் என எல்ல கதாபாத்திரங்களுக்கு வாய்ப்புகள் சமமாக வழங்கப்பட்டுள்ளது. இதுவே கங்கா-வின் பாத்திர அமைப்பதற்கான முழுமை அடைய ஊன்றுதலாக இருக்கின்றன எனவும் கூறலாம்.

முடிவில், கங்கா வாழ்வின் நிலைதான் என்ன என்ற ஆவலுடன் வாசித்த எனக்கு சிறிய ஏமாற்ற ஏற்பட்டதாகவே கூறலாம். சமுகத்தின் ஒப்புதலை பெற்ற கதாபாத்திரத்தின் வாழ்க்கை அமையுமாறு கதை அமைந்த விதம் மற்றும் அதன் முடிவு உணர்த்தியது என்றே கூற வேண்டும்.

மொத்ததில், முதல் பாகத்தின் எதிர்பார்ப்பு அன்றி, இப்புத்தகத்தை பின்கதை என்னும் நோக்கத்தில் ஒருமுறை வாசிக்கலாம் என்பது எனது கருத்து.

– தனு


Discover more from Dhanu The Literarian

Subscribe to get the latest posts sent to your email.

Dhanu

Here is your bookaholic buddy, waiting for you with new book recommendation!

Leave a Reply