Book Review- அகக்கண்ணாடி

✨புத்தகம்: அகக்கண்ணாடி
✨ஆசிரியர்: Dr. ரைஸ்
✨வாசிப்பு முறை: Kindle

Blogpost by Dhanu


இது ஒரு மனநல மருத்துவரின் தினக்குறிப்பீட்டில், தான் தினமும் சந்தித்த புதுவிதமான மனிதர்களையும் அவர்களின் மனநலம் பற்றி தொகுப்பாக எழுதியுள்ளார். இப்புத்தகம் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எழுத பெற்றுள்ளது.

இதில் மனச்சிதைவு, மறதி, மன-தேக மாற்றம் போன்ற பல விதமான மன வேறுபாடுகளை ஐம்பது பகுதிகளாக எழுதியுள்ளார். ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான மனிதர்கள். தற்போதைய சூழலில் அனைவரும் மனநலத்தின் அவசியத்தை பற்றி அறிந்து பயன்படுத்தி வேண்டும் எனும் நோக்கத்தின் ஓர் முயற்சி.

நம் வாழ்வில் நாம் அன்றாடம் வெளிப்படுத்தும் ஒவ்வொரு எதிர்வினை உணர்வுகளும் (reflexive reactions) பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளது. சில நேரங்களில், வாசிப்பின் போது கூறப்பட்டுள்ள மருத்துவ அறிகுறிகளை நம்முடன் ஒப்பிட்டு பார்க்கும் எண்ணம் எழுவது இயல்பு. அவ்வெண்ணங்களை மனதளவில் எடுத்து கொள்ளாமல் இருப்பது நலம்.

ஆசிரியரின் எழுத்து நடை நகைச்சுவை கலந்து எளிய முறையில் வடிவமைக்கபட்டுள்ள இப்புத்தகம், மனநல பற்றிய தகவல்களை தெளிவாக பகிர்ந்து கொண்டது சிறப்பு.‌ எனினும் அதிக அளவிலான மருத்துவ சொற்கள் (medical terms) பயன்படுத்தப்பட்டுள்ளதால் வாசிப்பின் போது சிரமம் ஏற்பட்டது. எனினும், மனநலத்தின் புரிதல் மற்றும் சக மனிதர்கள் பற்றிய புரிதலின் அவசியத்தை இப்புத்தகம் கூறுகிறது.

“மனநல மருத்துவம் எடுப்பவர் தாழ்வர்கள் அல்ல, சொல்லாத மற்றவர்கள் உயர்ந்தவர்கள் அல்ல” எனும் ஆசிரியரின் கூற்று உண்மையே.

‘அகக்கண்ணாடி’ படிப்பவர்களுக்கு தங்களை பற்றியும் உடன் உள்ளவர் மற்றவர்களை பற்றிய புரிதல் ஏற்படுத்தும் எனும் வகையில் இப்புத்தகத்தை பரிந்துரை செய்கிறேன்.

மேலும் இப்புத்தகத்தை பரிசாக அளித்த @fathima.ashab க்கு நன்றி.

x தனு


Discover more from Dhanu The Literarian

Subscribe to get the latest posts sent to your email.

Dhanu

Here is your bookaholic buddy, waiting for you with new book recommendation!

Leave a Reply