Book Review – கனவின் துடுப்பு

✨ புத்தகம்: கனவின் துடுப்பு
✨ எழுத்தாளர்: சங்கமித்ரா
✨ வெளியீடு: 2021
✨ பக்கம்: 115

3.9/5

Blogpost by Dhanu

இத் தொகுப்பானது இலங்கையில் நடைபெற்ற போரில் அடிமைபட்ட குடிமக்கள் அடைந்த அவதியை எளியநடையில் கூற தொடங்கி சமுகத்தின் ஒடுக்கு முறையில் அகப்பட்ட பெண்களின் மனப் போராட்டத்தின் ஆழமான சிந்தனைகளை குறுகிய வரிகளினால் அமையப்பெற்றுள்ளது. இப்புத்தகம் ‘சாரளம்’ எனும் தலைப்பில் தொடங்கி ‘பெண்’ யில் முடிந்திருந்திருக்கிறது.

ஒவ்வொரு கவிதையும் அக்கவிதையின் கருத்துக்களுடைய விடையை ஆழமாக சிந்திக்க தூண்டுவது போன்ற வினாக்களை நோக்கி நகர்கிறது. விடை கிடைக்க பெறாத வினாக்களும் பல இருப்பதில் ஆச்சரியம் இல்லை (இனியேனும் அவற்றிற்கான விடை அல்லது விளக்கம் கிடைக்க பெறுவனவாக…).

காலத்திற்கு ஏற்ப பருவநிலை மாற்றம் போல, இதிலுள்ள கவிதைகள் புதுமையாக உரையாடல் வடிவில் அமைந்திருக்கின்றன. இப்போதைய சமூகத்தின் மனநிலையுடன் ஒன்றி கவிதையின் கருவினை உள்வாங்கி எழுதப்பட்டிருக்கின்றது.

சில கவிதைகள் தலைப்பினை கொண்ட வடிவில் வரிகளை உருவாக்கப்பட்டு இருந்தது. முதலில் சொற்களின் வரிசை சிறிது இடம் மாறியது போல தோன்றினாலும், contemporary எனும் நவீன சமகாலத்தின் வாழ்வியலில் இருக்கும் நவீன மயம் போல கவிதையின் வடிவமைப்பில் ஒரு புதுமை என்று புரிந்து கொள்ள முடிகிறது.

இந்த புத்தகம் எனது 2021யினை இனிதே முடித்து வைக்க உறுதுணையாக இருக்க எனக்கு அனுப்பி வைத்த சங்கமித்ரா அவர்களுக்கு நன்றி. சிறப்பாக இயற்றி, அதில் நவீனத்துவத்துடன் புத்தகத்தை அமைத்ததற்காக பாராட்டுக்கள். மேலும் பல புத்தகங்களை எழுதுவதற்காக  புதினத்திலூம் புதுமை படைக்க வாழ்த்துக்கள்.

x தனு


Discover more from Dhanu The Literarian

Subscribe to get the latest posts sent to your email.

Dhanu

Here is your bookaholic buddy, waiting for you with new book recommendation!

Leave a Reply