✨ புத்தகம்: விழிகளின் நடுவில் வானம்
✨ எழுத்தாளர்: பி வே இலட்சுமி நாராயணன் @pv_ln
✨ வெளியீடு: 2022 Notion Press
✨ பக்கம்: 153
4/5
Blogpost by Dhanu
“அந்த இரவின் அமைதிக்கு ராகம் கொடுக்கும் பாடல்கள் ஏராளம் உண்டு” (91).
2022 ஆம் ஆண்டின் எனது சிறந்த வாசிப்பு பயணமாக துவங்கியது இச் சிறுகதை தொகுப்பு. இதில் மொத்தம் பத்து கதைகள் உள்ளன. பத்திலும் தெளிவான பத்து பக்கங்களுடன் திகட்டாத திருப்பங்களுடன் எளிமையாகக் கதை கூறியிருக்கிறார் ஆசிரியர் இலட்சுமி நாராயணன்.
இப்புத்தகத்திலுள்ள கதைகள் மாறுபட்ட களங்களிற்கேற்ப எழுதப்பட்டுள்ளது ஒரு சிறப்பான அம்சமாக உள்ளது. இவரின் கதைகளில் நகைச்சுவையுடன் திருப்பங்களும் கலந்து சிறுகதைக்கான சரியான அளவில் இருப்பதும் சிறப்பான அம்சமாகும்….
இடை இடையில், தான் ஒரு இசை ஞானியின் தீவிர ரசிகன் என்பதையும் காட்டியுள்ளார். படிப்பதற்கு இனிமையாகவும் எளிமையாகவும் இருப்பதால், புதிதாக வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள விரும்புகிறவர்களுக்கு இப்புத்தகம் ஒரு நல்ல துவக்கமாக இருக்கும் என நினைக்கிறேன்.
இப்புத்தகத்தை எனக்கு அனுப்பி வைத்த ஆசிரியர் இலட்சுமி நாராயணன் அவர்களுக்கு நன்றிகளும் பேரன்பும். மேலும் அவர் பல புத்தகங்களை எழுதுவதற்கு எனது வாழ்த்துக்கள்.
தனு
Discover more from Dhanu The Literarian
Subscribe to get the latest posts sent to your email.